நெய்வேலியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மூத்த வழக்கறிஞர் சிவமணி சுழற்கோப்பை வழங்கினார். 
Regional03

நெய்வேலியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி மூத்த வழக்கறிஞர் சிவமணி பரிசு வழங்கினார்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அதிமுக சார்பில் மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கடலூர், சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், ஊட்டி, மற்றும் புதுச்சேரி, பெங்களூர் ஆகிய பகுதிகளிலிருந்து 60 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அண்ணா தொழிற்சங்க தலைவர் அபு தலைமை தாங்கினார். கால்பந்து கழக செயலாளர் ஞானப்பிரகாசம், கணேசன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் சிவமணி கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT