விழுப்புரம் பிஎன்தோப்பு பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆய்வு மேற்கோண்டார். 
Regional03

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 11,886 பேர் தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வெழுதினர்

செய்திப்பிரிவு

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடந்தது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க தேர்வு நடத்தப்படும்.

இதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் அரசு, அரசு உதவி பெறும்,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு 9- ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூ. 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 6,695 மாணவர்கள் உதவித் தொகை பெறத் தகுதி உள்ளவர்கள் ஆவர். இத்தேர்வு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் 41 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 4,258 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 4,106 மாணவர்கள் தேர்வு எழுதினர். 152 மாணவர்கள் வருகை தரவில்லை.

விழுப்புரம் மற்றும் கோலியனூர் தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாம்பழப்பட்டு மையத்தை மாவட்ட கல்வி அலுவ லர் கிருஷ்ணன், திண்டிவனம் பகுதி மையங்களை மாவட்ட கல்விஅலுவலர் சாந்தி, மேல்மலை யனூர், செஞ்சி மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் சுப்பராயன் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர் என மாவட்ட கல் வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 31தேர்வு மையங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது. 3,820மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,550 மாணவ,மாணவியர் பங்கேற்று தேர்வெழுதி னர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT