Regional02

அரசுப் பள்ளியில் தாய்மொழி தினம்

செய்திப்பிரிவு

திருவாரூர் அருகே அடியக்க மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாய்மொழி தினம் நேற்று முன்தினம் கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சுதர்சனன் தலைமை வகித்தார். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி மையத்தின் பயிற்றுநர் தமிழ்க்காவலன், கையெழுத்தை அழகாக்கும் வழிமுறை கள் குறித்து விளக்கினார்.

திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் உமா, அழகு தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வடகரை உயர் நிலைப் பள்ளி தமிழாசிரியர் நளாயினி, அடியக்கமங்கலம் பள்ளி ஆசிரியர்கள் சிவ. இளமதி, ராஜபாண்டியன், கண்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT