விடுபட்ட மண்பாண்டத் தொழி லாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என ஒருங்கிணைந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தி னர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, திரு வாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட மண்பாண்டத் தொழி லாளர்கள் தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ஆ.தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பி.முருகேசன் வரவேற்றார். இதில், மாவட்டச் செயலாளர் ஜி.கலியமூர்த்தி, துணைச் செயலாளர் எம்.சுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கல்யாண சுந்தரம், பொருளாளர் சைவராஜ், தாராசுரம் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 8,632 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நிலையில், மழைக்கால நிவாரணமாக 526 பேருக்கு மட்டுமே தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல, பிற மாவட்டங்களிலும் அனைவருக் கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
மண்பாண்டம் தயாரிக்க பயன்படுத்தும் சைலா வீல்-ஐ அனைவருக்கும் அரசே இலவச மாக வழங்கி, இலவச மின்சாரமும் வழங்க வேண்டும். 60 வயது முதிர்வடைந்த மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தொழி லாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக அரசு மண்பாண்டத் தொழிலாளர் களுக்கு மட்டும் வழங்கவில்லை. இதை உடனடியாக வழங்க வேண் டும். மண்பாண்டத் தொழிலுக்கு மண் எடுக்க எவ்வித தடையும் விதிக்கக் கூடாது.
இந்த கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.