Regional02

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காணி நில வளாகம் அமைக்க நடவடிக்கை மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறில் திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஆகியவற்றின் சார்பில், மகாகவி பாரதியார் குறித்த இலவச அஞ் சல் வழி சான்றிதழ் படிப்புக்கான பாரதியார் பாடங்கள் நூல் வெளி யீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு, பாரதி இயக்க அறங்காவலர் இரா.மோகன் தலைமை வகித்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழக மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குநர் சி.சித்ரா நூலை வெளியிட, தஞ்சை லட்சுமி ரவி பெற்றுக்கொண்டார்.

பின்னர், சித்ரா பேசியதாவது: பாரதி இயக்கம் செயல்படுத்தி வரும் இலவச அஞ்சல் கல்வித் திட்டத்தில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். ஓராண்டு கால பாடத்திட்டத்தின் நிறைவில், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தப் பணியில், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படும்.

பாரதியார் வாழ்ந்த காலத் தில், அவர் ஈரோட்டில் கருங்கல் பாளையம் நூலகத்துக்கு வந்து சொற்பொழிவாற்றி உள்ளார். ஆனால், அவர் ஆயுள் காலத்தில் வந்திராத கோவை மாநகரில், அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

பாரதியார் தனது கவிதை யொன்றில், ‘காணி நிலம் வேண் டும்' என்று பாடியிருப்பார். அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பாரதி விரும்பிய காணி நிலம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஏற்பாடு செய்யப் பட்டு, அதற்கான அரசு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காணி நில வளாகத்தை அமைத்து, அந்தப் பாடலில் பாரதி குறிப்பிட்டபடி மாளிகையைக் கட்டி, அங்கு கேணி அருகில் தென்னை மரங்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பாரதியின் சிலை, நூலகம், கூட்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, அரசு நிலம் ஒதுக்கீடு செய்து, முதல் கட்டமாக ரூ.2.50 கோடியும் அனுமதித்திருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில், நூலை எழுதிய தஞ்சை வெ.கோபாலன் ஏற்புரை யாற்றினார். திருவையாறு பாரதி இயக்க அஞ்சல் வழிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT