சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா அறிக்கை: சாத்தான்குளம் பேரூராட்சி பராமரிப்பில் உள்ள வாரச்சந்தை மூன்றாண்டு குத்தகைக்கான ஏலம் மற்றும் பேரூராட்சி எல்கையில் ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகளில் குத்தகை வசூல் செய்யவும், பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் வசூல் மற்றும் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் செய்யவும், பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு கடைகளுக்கும் ஏலம் பிப்ரவரி 24-ம் தேதி சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஏலத்தில் பங்குகொள்பவர்கள் அதற்குரிய கட்டணத்தை அங்கீகரிக்கப் பட்ட வரைவு காசோலையாக செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.