Regional01

மண்பாண்ட தொழில் வளர்ச்சிக்கு அரசு உதவ கோரிக்கை

செய்திப்பிரிவு

அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட தொழிலாளர் நலச்சங்க தென்மண்டல மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, சங்க பொதுச் செயலாளர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமை வகித்தார். தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி வரவேற்றார்.

மாநாட்டில், ‘விடுபட்ட அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் குலாலர் சமுதாயத்துக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். நவீன மண்பாண்டங்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு உரிமம் எளிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட மண்பாண்ட கூட்டுறவு சங்கங்களை புதுப்பித்து அந்தந்த பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து, மானியத்துடன் கடன் வழங்கி தொழில் வளர்ச்சி அடைய அரசு உதவி செய்ய வேண்டும். மண்பாண்ட தொழிலில் சாதனை படைக்கும் தொழிலாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT