ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய எம்எல்ஏ பன்னீர்செல்வம். 
Regional02

66 மலைவாழ் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 66 மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசப்பாக்கம் எல்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்து, 66 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, “கலசப்பாக்கம் தொகுதியில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 424 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, இயற்கை மரணம் அடைந்த 216 பேரின் குடும்பத்துக்கு நிதி உதவி, 107 பேருக்கு திருமண நிதி உதவி, 357 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை என 1,103 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதில், வட்டாட்சியர் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, மரியதேவானந்த், ஒன்றிய குழுத் தலைவர் ஜீவாமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT