வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில், போச்சம்பள்ளியில் நடந்த நடைபயணத்தை செல்லக்குமார் எம்பி தொடங்கி வைத்தார். 
Regional02

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடைபயணம் மேற்கொண்டனர்.

மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ஏகாம்பவாணன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சேகர், வட்டார தலைவர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபயணத்தை, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தொடங்கி வைத்தார். ஒலப்பட்டி இணைப்புச் சாலையில் தொடங்கிய நடைபயணம், கெரிக்கேப்பள்ளி கேட் வழியாக சாமல்பட்டியில் நிறைவடைந்தது. இதில் நிர்வாகிகள் அக.கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

SCROLL FOR NEXT