தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்தின், காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் திருவள்ளூர் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது, 19 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.16.98 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக மின்நுகர்வோர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்குரிய சமரசத் கூடுதல்தொகை ரூ.1.37 லட்சம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. மின் திருட்டுதொடர்பான தகவல்களை 9445857591 என்ற எண்ணில்தெரிவிக்கலாம்.