விழுப்புரம் பூந்தோட்டக் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறார் பூங்கா. 
Regional01

ரூ.1.5 கோடியில் சீரமைக்கப்பட்ட விழுப்புரம் பூந்தோட்டக் குளத்தை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

விழுப்புரம் நகரின் பூந்தோட்ட குளம் மற்றும் அதன் சுற்றுப் பாதைகள் ரூ. 1.5 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல் வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள ஆதீ வாலீஸ்வரர் கோயிலையொட்டி குளம் ஒன்று இருந்து வந்தது. இதனை நகராட்சி நிர்வாகம் பூந்தோட்டம் குளம் என்று தங்களின்ஆவணங்களில் பதிவேற்றி யுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளமாக இருந் ததை நகராட்சி நிர்வாகம் நாள் தோறும் சேரும் சுமார் 10 டன்எடையுள்ள குப்பைகளை தொடர்ந்து கொட்டி வந்தது. இதனால் குளத்தின் 75 சதவீதம் குப்பைகளால் சமன் செய்யப்பட்டு, பின்பு இங்கு ‘டாக்ஸி ஸ்டேண்ட்’ அமைக்கப்பட்டது. பின்னர் அங்கு அரசியல் கட்சிகள் பொது கூட் டங்களை நடத்தி வந்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டுநவம்பர் 26-ம் தேதி முதல்வர் பழனிசாமி ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் பூந்தோட்டம் குளம் சீரமைப்புமற்றும் பூங்காவுடன் கூடிய நடை பாதை அமைக்கும் பணியினை தொடக்கி வைத்தார்.

சீரமைக்கப்பட்ட குளம், நடை பயிற்சி செல்ல ஏதுவாக குளத்தைச் சுற்றிப் பாதைகள், குழந்தைகள் விளையாட விளையாட்டுக் கருவி கள், இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள அதற்கான கருவிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் மோட்டார் மூலம் குளத்தில் தண்ணீர் இறைக்கப்பட்டு வருகி றது.

சீரமைக்கப்பட்ட இந்த பூந்தோட்டக் குளம் மற்றும் இக்குளத்தை யொட்டி அமைக்கப்பட்டு ”அம்மா பூந்தோட்டம் பூங்கா”வை நாளை (பிப். 22) மாலை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சிவி சண்முகம் மேற்பார்வையில். ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT