கடலூரில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 
Regional02

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல்அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரி முன்னிலை வகித்தார்.

பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததாவது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 10,55,291, பெண் வாக்காளர்கள் 10,86,436, மூன்றாம் பாலினத்தவர்கள் 208 நபர்களும் என மொத்தம் 21,41,935 வாக்காளர்கள் உள்ளனர். தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், வாக்குப் பதிவின்போது வாக்குச்சாவடியில் பணியாற்ற போதுமான தேர்தல் அலுவலர்கள் உள்ளனர். வாக்காளர் கள் வாக்களிக்க ஏதுவாக 2,295 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தற்சமயம் கரோனா தொற்று பரவல்தடுப்பு நடவடிக்கையாக 1,050 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குப்பதிவு மையங்கள் கூடுதலாக பிரிப்பதின் அடிப்படையில் 702 புதிய வாக்குப் பதிவு மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஏற்படுத்தப்பட வுள்ளன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வருகின்றது. இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பது குறித்து கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து பணிகளும் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

SCROLL FOR NEXT