Regional01

கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகம் திறப்பு

செய்திப்பிரிவு

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதிய நிர்வாக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம், ஆர்.சி.எம்.எஸ் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT