Regional02

443 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

செய்திப்பிரிவு

பெரம்பலூரில் தமிழக முதல் வரின் சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் 443 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் நேற்று வழங்கப்பட்டன.

பெரம்பலூர் ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா.தமிழ்ச் செல்வன், குன்னம் தொகுதி எம்எல்ஏ, ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆட்சியர் ப.வெங்கட பிரியா நேற்று பட்டாக்களை வழங்கி பேசியது:

அரசு புறம்போக்கு நிலங் களில் தற்போது உபயோ கப்படுத்தாத மற்றும் எவ்வித ஆட்சேபணையும் இல்லாத இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிசைப்போட்டு வசிக்கும் மக்களுக்கு விலை யில்லாமல் இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட் டத்தில் 443 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங் கப்பட்டுள்ளன என தெரிவித் தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT