Regional02

நம்மாழ்வார் இயற்கை வழி விவசாய திருவிழா

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் நம்மாழ்வார் இயற்கை வழி விவசாய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆயுதப்படை வளாகத்தில் இயற்கை முறையில் சொட்டு நீர் பாசன முறையில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் காய்கறி விதைகள் நடும் விழாவை எஸ்.பி.பொன்.பகலவன் தொடங்கி வைத்தார்.

ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சி.அய்யர்சாமி முன்னிலை வகித்தார். இதில் ஆயுதப்படை காவலர்கள் காய்கறி விதைகளை நட்டனர்.

SCROLL FOR NEXT