Regional01

கட்டில் தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை டக்கரம்மாள் புரம் பகுதியிலுள்ள கட்டில் தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து நேரிட்டது.

டக்கரம்மாள்புரத்தில் தனியாருக்கு சொந்தமான கிட்டங்கி உள்ளது.இங்கு கட்டில், மெத்தை தயாரிப்புக்கு தேவையான தேங்காய் நார், மைக்கா பலகைகள், பிளைவுட் போன்ற பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் அங்கு சென்று தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT