Regional01

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் அரசின் பல்வேறுநலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.

வருவாய்த்துறை மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின்கீழ் 721 பேருக்குஇலவச பட்டாக்கள், அரசு கல்வி உதவித்தொகை பெறும் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 22,817 பேருக்கு இலவச 2 ஜிபிடேட்டா கார்டுகள், 83 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம்பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், பட்டப்படிப்பு படித்த 3,186 பெண்களுக்குதலா ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம்,பிளஸ் 2 படித்த 1,812 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தலா 8 கிராம்தங்கம் வழங்கப்பட்டது. ஆட்சியர் வே.விஷ்ணு, வருவாய் அலுவலர் பெருமாள், எம்எல்ஏ நாராயணன், மாவட்டஅதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT