வைகுண்டத்தை அடுத்துள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கிடந்ததை அங்கு குளிக்க வந்த மக்கள் பார்த்தனர். அந்த சிலையை அவர்கள் எடுத்து முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் சிலையை வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் திருநெல் வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வல்லி வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை பார்வையிட்டார்.
ஆட்சியர் செந்தில்ராஜின் உத்தரவுக்குப் பிறகு சிலையை அருங் காட்சியகத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.