வந்தவாசி அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தி.மலை மாவட்டம் வந்தவாசி நகரம் லட்சுமி நகரில் வசிப்பவர் வேணுகோபால்(49). இவர், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்தார். அவரது கிளினிக்கில் மருத்துவ நல பணிகள் இணை இயக்குநர் கண்ணகி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தனர். அப்போது, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேணுகோபால் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து இணை இயக்குநர் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில், தெள்ளார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கைது செய்தனர்.
மேலும், அவர் நடத்தி வந்த கிளினிக்கில் இருந்து ஊசிகள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்து பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.