TNadu

பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.ஆர்.தர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மே 3 முதல் 21-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்ததமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தற்போதுதான் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். 40% பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், பாடப்பகுதிகளை முழுமையாக நடத்தி முடிக்க ஏப்ரல் மாத இறுதி வரை ஆகும். இதற்கிடையே செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் கூடுதல் சுமையுடன், கால அவகாசமின்றி தேர்வை எதிர்கொள்வது, அவர்களுக்கு அச்சத்தையும், மன அழுத்தத்தையும் தருவதாக பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT