Regional02

வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிப்ரவரி 19-ம் தேதி கறுப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர்.

அதன்படி, திருப்பூரில் வழக்கறிஞர்கள் நேற்று கறுப்பு தினம் அனுசரித்து, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அவிநாசி, பல்லடம், உடுமலை, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகள், மறுதேதி குறிப்பிட்டு தள்ளிவைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT