Regional01

குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் குஜி லியம்பாறை வட்டம் சீரங் கம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன்கள் கண்ணன் (16), குமார் (7). இருவரும் நேற்று வீரியப்பட்டி மதுக்கரை சாலையில் உள்ள கல்குவாரி நீரில் குளிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அன்பு (12), சேவகவுண்டர் மகன் லோகு (14) ஆகியோருடன் சென்றுள்ளனர்.

குவாரியில் குளிக்க இறங்கிய கண்ணன் நீச்சல் தெரியாததால் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட மற்ற மூவரும் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்தினர் குவாரி நீரில் மூழ்கி இறந்த கண்ணனின் சடலத்தை மீட் டனர். மாயனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT