Regional02

மதுக்கடையை மூட ஒப்புதல்: போராட்டம் வாபஸ்

செய்திப்பிரிவு

சிவகங்கை பழைய மருத்துவமனை அருகே செயல்படும் மதுக்கடையால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.

அந்தக் கடையை மூட வேண்டுமென திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்காததால் மதுக்கடைக்கு இன்று (பிப்.19) பூட்டு போடப்போவதாக எதிர்க்கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தர்மலிங்கம் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த், காங்கிரஸ் நகரத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுக்கடையை பிப்.22-ம் தேதி வேறு இடத்துக்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதுக்கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் வாபஸ் பெற்றன.

SCROLL FOR NEXT