கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள். 
Regional02

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜெயபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப் பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனதாரர் களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட ஆட்சி யருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி, பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT