‘உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை நடப்பாண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திப்பார்கள். விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தி, பயிற்சியளிப்பர். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு தொடர்பு மையம் அமைக்கப்படும். வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி முக்கிய தொழில்நுட்ப செய்திகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.
எனவே, உழவர் அலுவலர் தொடர்புத் திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.