Regional03

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்புஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வசந்தன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சவுந்தரபாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். முத்துப்பேட்டை வட்டாரத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த உதவியாளர் கனகசுந்தரம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியும், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT