32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆலையின் நுழை வாயில் முன்பு சாலையில் சென்ற வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பயணிகள், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் (பணியகம்) ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் உதவி காவல் கண்கானிப்பாளர் ஹர்ஷ் சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், திருச்செந்தூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமலாவதி பள்ளி:
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் வைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி டிரஸ்டி ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன், துணை முதல்வர் எஸ்.அனுராதா ராஜா, தலைமை ஆசிரியர் இ.ஸ்டீபன் பாலாசிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாதுகாப்பான முறையில் பள்ளி வாகனத்தை ஓட்டுவது குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவர் எஸ்.சுரேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் ஆல்விஸ் கிப்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.