தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் நேற்று பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் எம்.ஜெயமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.பன்னீர்செல்வம், உதவி செயலாளர் எஸ்.பால்ராஜ் பட்டுகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் உரியதேதியில் சம்பளம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வுபேச்சுவார்த்தையை உடனேதொடங்க வேண்டும். பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி,ஓராண்டுக்கு மேலாக உள்ள சம்பளநிலுவையை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாகர்கோவில்