தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வங்கி ஊழியர் சத்தியசீலன்(40). இவர், அடையபுலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. மேலும் அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன.
பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.