Regional01

வாகன ஓட்டுநர்களுக்கு யோகா பயிற்சி

செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த யோகா பயிற்சியை சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி தொடங்கிவைத்தார். பயிற்சியில் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்களுக்கு, கல்லூரி யோகா ஆசிரியர் கவிதா பயிற்சி அளித்தார்.

பயிற்சியின் மூலம் ஓட்டுநர்களின் மன அழுத்தம் குறையும் என்றும் நீண்ட தூரம் வாகனம் செலுத்தும் ஓட்டுநர்கள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை ஓய்வு எடுக்க வேண்டும். அலைபேசியில் பேசி கொண்டும்,மது அருந்தி விட்டும் வாகனத்தை இயக்கக் கூடாது என பயிற்சியில் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT