Regional01

வாடிப்பட்டி, அவனியாபுரத்தில் விபத்துகள் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மதுரை தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமக்குமார் (19). கூலித்தொழிலாளியான இவரது நண்பர் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்த தங்கம் மகன் கவுதம் (18). இருவரும் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் பெருங்குடிக்கு சென்றனர். வெள்ளக்கல் அருகே சென்றபோது, காரியாபட்டி- மதுரைக்கு வந்த பஸ் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT