மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று தேர்ப்பொங்கல் வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று கோயி லில், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை தேர் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில், மேட்டூர், மேச்சேரி, கூணான்டியூர், குஞ்சாண்டியூர், கருமலைக்கூடல், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் வளாகம் அருகே தேர்ப்பொங்கல் வைத்து, வழிபட்டனர். தொடர்ந்து, பத்ரகாளியம்மன் புறப்பாடு நடந்தது.
திருவிழாவில், நாளை (19-ம் தேதி) விநாயகர் பூஜை, ஆயக்கால் பூஜையும், 23-ம் தேதி இரவு 11 மணியளவில் சக்தி அழைத்தலும், 24-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் திருக்கொடியேற்றமும் நடைபெறவுள்ளது. 25-ம் தேதி மாலை சின்ன தேரோட்டமும், 26-ம் தேதி மாலை பெரிய தேரோட்டமும், 27-ம் தேதி பெரிய தேர் நிலைசேருதலும், 28-ம் தேதி சத்தாபரணம், மார்ச் 1-ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.