செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் நுழைவு வாயில் அமைக்க அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ தூசி கே.மோகன். 
Regional02

வெம்பாக்கம் அரசு பள்ளிக்கு நுழைவு வாயில் அமைக்க பூமி பூஜை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பில் நுழைவு வாயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடை பெற்றது.

இதில், எம்எல்ஏ தூசிகே.மோகன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் வெம்பாக்கம், சோதியம்பாக்கம், பாவூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும், 8 கிளைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதில் வெம்பாக்கம் ஒன்றியக் குழு தலைவர் ராஜி, ஒன்றியச் செயலாளர்கள் நாகப்பன், மகேந்திரன், அரங்கநாதன், துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT