தி.மலை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த 8-ம் தேதி முதல் வேட்டி, சேலை வழங்கப்படுகிறது என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 78,841 தொழிலாளர்கள், பொங்கல் சிறப்பு தொகுப்பு பெற தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, பொங்கல் தொகுப்புகள் (உணவுப் பொருள்) வழங்கப் பட்டது. மேலும், வேட்டி, துண்டு மற்றும் சேலை ஆகியவை கடந்த8-ம் தேதி முதல் வழங்கப் படுகிறது. தி.மலை காந்தி நகர் 6-வது தெருவில் உள்ள காந்தி நகர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழங்கப் படுகிறது” என தெரிவித்துள்ளார்.