Regional02

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நாளை முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கல்

செய்திப்பிரிவு

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியான நிலையில் 19-ம் தேதி (நாளை) முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவுள்ளன என அதன் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் 19-ம் தேதி (நாளை) முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங் களில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத் திலேயே மதிப்பெண் பட்டியல் வழங்கப் படும். தனித் தேர்வர்கள் மட்டும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வந்து பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT