Regional02

தனியார் ஏலச்சீட்டு நிறுவன நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் - மங்கலம் சாலை குமரன் கல்லூரி எதிரே தனியார் ஏலச்சீட்டு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு மங்கலம் சாலை, இடுவம்பாளையம், எஸ்.ஆர்.நகர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக சீட்டு எடுத்தவர்கள் யாருக்கும், இந்நிறுவனம் பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர், கடந்த 2-ம் தேதி அந்நிறுவனத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அதிகளவில் பண மோசடி உறுதி செய்யப்பட்டு, ஏலச்சீட்டு நிறுவன தலைமை நிர்வாகியான திருப்பூர் வளையங்காடு எம்.என்.எஸ். நகரைச் சேர்ந்த முனியாண்டி (47) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

SCROLL FOR NEXT