சேலத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி பகுதியில் 4 பேர், வெளியூர்களில் இருந்து வந்த 6 பேர் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து 13 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் உள்ளிட்ட அரசின் கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற தவறி வருகின்றனர்.
மீண்டும் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.