Regional02

ஊத்தங்கரையில் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

ஊத்தங்கரையில் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி காலை 9 மணிக்கு ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, சேலம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இதற்கான கல்வி தகுதியாக 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் ஆவர். இதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும். இத்தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல் களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

SCROLL FOR NEXT