திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் பரஞ்ஜோதியிடம், அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
மனுவில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தில் குடும்பங்கள் என்பதை மாற்றி தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வேலை பெறும் உரிமை உடையவர் என சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகர்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.