வசந்த பஞ்சமி தினமான நேற்று பிராணிகளின் உணர்வுகள் மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறைமற்றும் மாவட்ட பிராணிகள் வதைதடுப்புச் சங்கம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நடைபெற்றது.
தூத்துக்குடி கால்நடை பன்முக மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மா.சம்பத் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஏ.எஸ்.சுரேஷ், மருத்துவர் சந்தோஷம் முத்துக்குமார் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 782 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.