Regional02

கம்பி திருடியதாக 4 பேர் கைது

செய்திப்பிரிவு

வேலூரில் இரும்பு கம்பி திருடிய வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (32). இவர், தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் வாங்கி வைத்திருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர் பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினேஷ் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணை யில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24), சஞ்சய் (20), முருகன் (21) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT