Regional02

நண்பர் கொலை வழக்கில் தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைக்குப் பிறகு கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட டூம் லைட் பகுதியைச் சேர்ந்தவர் ஷாருக்கான் (25). தாராபுரம் சாலையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் செல்லாண்டியம்மன் துறை ஹவுசிங் யூனிட் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24), பெரியகடை வீதி பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை காரணமாக, ஷாருக்கான் மீது அதிருப்தியில் இருந்தமணிகண்டன், கடந்த ஜனவரி31-ம் தேதி இரவு ஷாருக்கானை கழுத்தறுத்து கொலை செய்தார். நண்பரை கொலை செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் மணிகண்டன் விஷம் குடித்தார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீது, தெற்கு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சிகிச்சையில் இருந்த மணிகண்டன் குணமடைந்ததையடுத்து, நேற்று அவரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT