Regional01

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று (16-ம் தேதி) இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வரும் மலர்களால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும்.

தொடர்ந்து வரும் 22-ம் தேதி கொடியேற்றமும், 28-ம் தேதி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.

கரோனா பாதுகாப்பு விதிமுறை களை பின்பற்றி, பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு குண்டம் இறங்கவும், கங்கணம் கட்டிக் கொள்ளவும் அனுமதியில்லை எனவும், செங்கரும்பினை குண்டத்தில் போடக் கூடாது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT