Regional01

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தில் ஊழல் திமுக எம்பி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக திமுக எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகவளாகத்தை நேற்று திமுக எம்பி பார்த்திபன் ஆய்வு செய்து வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியில் சேலம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் 177 கடைகள் கட்டப்பட்டது. தற்போது, வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகையை மாநகராட்சி நிர்வாகம் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால், வாடகை செலுத்த முடியாமல் பல வியாபாரிகள் கடைகளை மூடி வைத்துள்ளனர். 30 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மேலும், இத்திட்டத்தில் தரமற்ற முறையில் பணிகள் செய்து வருகின்றனர். ஊழல் தொடர்பாக மாநகராட்சி ஆணையரை சந்தித்து வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT