Regional02

வாகனச் சோதனையின்போது காவலரை தாக்கிய காவலர் உட்பட 3 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

அப்போது அவர்கள் காவலர் இளமாறனை தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பஜார் போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்த கூரியூரைச் சேர்ந்த சிவமுருகன், ரபீக் முகம்மது, பிலால் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில் ரபீக் முகம்மது பெருநாழி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவர் மீது ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் பணிக்குச் செல்லாமல் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT