Regional01

மாவோயிஸ்ட் ஆதரவாளர் கைது

செய்திப்பிரிவு

அரசுக் எதிராக கோஷம் எழுப்பிய வழக்கில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கேரள மாநில, ‘தண்டர்போல்ட்’ கமாண்டோ போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகமும் ஒருவர். இவரது உடல் கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது, மாவோயிஸ்ட் மணிவாசகத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் சிலர் முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பான புகாரின்பேரில்,

தீவட்டிப்பட்டி போலீஸார், சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக 6 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.

இந்நிலையில்,நேற்று காலை இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி மாவட்டம், அரூர் சித்தானந்தம் (68) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT