திருவண்ணாமலையில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப் பட்ட 42 சமையலர் பணிக்கான நேர் காணலை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் கதிர்காமன் அளித்துள்ள மனுவில், “தி.மலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 42 சமையலர் பணிக்கு கடந்த 1 மற்றும் 2-ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. இதில், இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. நேர்காணலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால், தகுதி உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பதவிக்கு ரூ.10 லட்சம் வரை கைமாறியுள் ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நேர்காணலை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டின் கீழ் பெண்கள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நேர் காணல் நடத்தப்பட்டு 42 சமையலர் பணி இடங்களை நிரப்ப வேண் டும். இதில், முறைகேட்டில் ஈடுபட்டஅதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதியில் இடம் கிடைக்க உதவுங்கள்
நிலத்தை மீட்டு கொடுங்கள்
இதுநாள் வரை, எனது நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறேன். என்னை, எனது மகள் கவனித்துக் கொள்ளவில்லை. மேலும். அவருக்கு நான் தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தை விற்பனை செய்ய முயன்று வருகிறார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக் கவே, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். என்னுடைய நிலத்தை மீட்டுக் கொடுத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக அவரை, நுழைவு வாயிலில் சோதனை செய்த காவல் துறையினர், அவரது பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
உள்ளிருப்பு போராட்ட எச்சரிக்கை
மேலும், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் சுப்ரமணி அளித்துள்ள மனுவில், “தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். பயிர்க்கடன், பண்ணை சாரா கடன் மற்றும் நகை கடன்களை பெற்றுள் ளனர். இதனையும், தள்ளுபடி செய்ய முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.