சோழதரம் அருகே உள்ள புடை யூர் ஊராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சோழதரம் அருகே உள்ள புடையூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பூங்காக அமைப்பதற்காக ஊராட்சி இடத்தை சுத்தப்படுத்தி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு மரக் கன்றுகள், பூச்செடிகள் நட்டனர்.
அப்பகுதி மக்களே தினமும் பராமரித்து வந்தனர். அப்போது மாவட்ட நிர்வாகத்தால் இந்த பூங்காவிற்கு விருதும் வழங் கப்பட்டது. கடந்த பல மாதங்களாக பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. சுற்றுப்புற வேலிகள் இல்லாமல் அதில் உள்ள செடிகள் சேதமடைந்து வருகிறது. பலரும் அப்பகுதியில் ஆடு,மாடுகளை மேய்ப்பது, அங்குள்ள மரக்கன்றுகளை வெட்டிச் செல்வது, அசுத்தங்கள் செய்வது என பூங்காவை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவும், பூங்காவை முறையாக பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.