மீனவப் பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.சிவகாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவப் பட்டதாரி இளைஞர்கள் 20 பேருக்கு ஐஏஎஸ் போட்டித் தேர்வில் கலந்துகொள்ள சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றன. கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இதில் பயிற்சி பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத் துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணை யதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள் ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 19-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.