குமாரபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் தனகோபால் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, நூல் விலை உயர்வு, பழைய வாகனங்களை உடைக்கும் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
முன்னதாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. நகர தலைவர் ஜானகிராமன், நிர்வாகிகள் சிவராஜ், கோகுல், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.